தாலாட்டு



தாய்மை அழகு. தாலாட்டு பாடல் பாடும் பழக்கும் இருந்தால் அத்தாய்மையின் முழு அழகையும் அச்சேய் பெற்று இன்புறம் என்று கருத்துக்கு எதிர்வாதம் உண்டோ?

சிற்றூர்களில் குழந்தையை தூங்க வைக்க வயலோருமும், மரத்தடியிலும் ஒலிக்கும் தாய்மார்களின் குரல், அக்குழந்தை பெற்ற பெரும் பேறு! அதன் இனிமை அழகினும் அழகு! நாம் அதனை மகிழ்ந்தோம். ஏனோ நம் அடுத்த தலைமுறைக்கு தர மறந்தோம்!

புரட்சிக் கவிஞரின் தாலாட்டு பாடல்களை பாட பயிற்சி எடுங்கள்!
தமிழின்பத்தில் மகிழுங்கள்! அவரின் சொற்கள் எளிமையாக இருக்கும்.. பாடவதற்கு ஏற்ற இனிமையான தாளமெட்டு இருக்கும்!

ஆண் குழந்தை, பெண் குழந்தை என இருவருக்கும் தனித்தனியே தாலாட்டு பாடல்கள் உள்ளன! இங்கு இணைத்துள்ள பெண் குழந்தை தாலாட்டு பாடலை கேட்டு மகிழுங்கள்!

பொதுவான தாலட்டு பாடல்களையும் இயற்றியுள்ளார். அவர் தமிழ்த் தொண்டை அளக்க கருவிகள் உண்டோ?.

தொட்டிலில் ஆடும் கிளியே -  என்
தூய தமிழின் ஒளியே
கட்டிக் கரும்பே தூங்கு - முக்
கணியின் சாறே தூங்கு
தட்டிற் பாலும் சோறும் - நான்
தந்தே னேநாள் தோறும்
சுட்டப் பத்துடன் வருவேன் - நீ
தூங்கி எழுந்தால் தருவேன்!


(இளைஞர் இலக்கியம் - தாலாட்டும் துயிலெழுப்பும் - பாடல் 3)

பாடல்:

பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள் பாடியவர் : புதுச்சேரி ஞானப்பிரகாசம் வடிவேலு



 



Comments

Popular posts from this blog

படி!!!